New Updates! Fresh news just arrived.

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உறவுகள் கௌ...

News

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உறவுகள் கௌரவிப்பு!

November 24, 2025 2:55 pm
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உறவுகள் கௌரவிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னமியினரின் மாவீரர்கள் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு றொசான் தலமையில் இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.





இதில் முதல் நிகழ்வாக மாவீரர்கள் பெற்றோர் உரித்துடையோர் வரவேற்க்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாவீரர்கள் திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தபபட்டு
உறவுகள் கௌரவிப்பு இடம் பெற்றது.





இக் கௌரவிப்பில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.





இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி சற்குணதேவி, முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் செ.உதயசிவம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுன் முக்ஜியஸ்தர் திருமதி கிருபா கிரிதரன் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலரும் கலந்துகொண்ட அதேவேளை வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர் சுமார் 300 பேர்வரை கலந்துகொண்டிருந்தனர்.





பூ.லின்ரன்






https://youtu.be/5dYJmUZ4abw?si=qXHeZQ8e_YZFdUN_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now