New Updates! Fresh news just arrived.

கண்டியில் வில்லியம் கோபல்லவ மாவத்தையின் ஒரு பகுதியை 4 வழி...

News

கண்டியில் வில்லியம் கோபல்லவ மாவத்தையின் ஒரு பகுதியை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தி மேம்படுத்த நடவடிக்கை!

November 25, 2025 9:55 am
கண்டியில் வில்லியம் கோபல்லவ மாவத்தையின் ஒரு பகுதியை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தி மேம்படுத்த நடவடிக்கை!

கண்டி வில்லியம் கொபல்லவ மாவத்த 2+900 கிலோமீற்றர் தொடக்கம் 3+736 கிலோமீற்றர் வரைக்குமான வீதியை நான்கு பாதைகள் தரநியமமாக விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.





வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் விடயதானத்தின் கீழ் காணப்படும் கண்டி வில்லியம் கொபல்லவ மாவத்த 2+900 கிலோமீற்றர் தொடக்கம் 3+736 கிலோமீற்றர் வரைக்குமான வீதி பயணிகள் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான வீதியாக அமைவதுடன், அதனை மேம்படுத்துவது நகரப் பயணிகள் போக்குவரத்தை விருத்தி செய்வதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், மற்றும் அப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏதுவாகவும் அமையும்.





அதற்கமைய, குறித்த வீதியை நான்கு பாதைகளாக விரிவாக்கம் செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான தேசிய போட்டிப் பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 05 விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளனர்.





உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்த விலைமனுதாரரான M/s Maga Engineering (Pvt) Ltd இற்கு 696.75 மில்லியன் ரூபாய் தொகைக்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






https://youtu.be/guzw7614FD0?si=idbDOm3JXAF07gMv

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now