New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு! ...

News

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு!

November 25, 2025 2:39 pm
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு!

கிளிநொச்சி - அக்கராஜன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.





கணவன் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டார். இந்நிலையில் மனைவி தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்த கணவன் மீண்டும் மனைவியை தாக்கியவேளை அந்த பெண்ணின் தந்தை தாக்குதலை தடுக்க முற்பட்டார்.





இதன்போது மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.





குறித்த சம்பவத்தில் 59வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.





அவருடன் சேர்ந்து குறித்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அக்கராயன் குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





பு.கஜிந்தன்






https://youtu.be/guzw7614FD0?si=idbDOm3JXAF07gMv

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now