New Updates! Fresh news just arrived.

வட்டுக்கோட்டையில் இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப் பொருள...

News

வட்டுக்கோட்டையில் இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

November 25, 2025 5:14 pm
வட்டுக்கோட்டையில் இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





இது குறித்து மேலும் தெரியவருகையில்,





இன்றையதினம் மூளாய் - வேரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.





அத்துடன் பொன்னாலை தெற்கு, சுழிபுரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.





இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பு.கஜிந்தன்






https://youtu.be/guzw7614FD0?si=idbDOm3JXAF07gMv

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now