New Updates! Fresh news just arrived.

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு!

News

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு!

November 27, 2025 8:21 am
கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு!

வெள்ள நீர் நிரம்பியுள்ள கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கிய நிலையில் குறித்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.





குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலுள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்ற பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது.





இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினரும், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.





மேலும் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த காரில் ஆண், பெண் மற்றும் சிறுமி என மூவர் இருந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவத்தார்.





மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





பாறுக் ஷிஹான்






https://youtu.be/v8ubsm6PDj8?si=rxuxnEjtxKs5Anl-

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now