23 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து! - ...
23 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து!
மொனராகலை பகுதியில் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிவதால், வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியினுடைய கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
இதன்போது, 23 பயணிகளோடு நீரோட்டத்தினை கடந்து பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆனாலும், உடனடியாகச் செயற்பட்டிருந்தமீட்புக் குழுவினர் பேருந்திலிருந்த பயணிகளினை பத்திரமாக மீட்டதோடு, பேருந்தினையும் வெள்ளத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.