New Updates! Fresh news just arrived.

நாட்டை நிலைகுலைய வைத்துள்ள கனமழை மற்றும் வெள்ளம் - தேசிய ...

News

நாட்டை நிலைகுலைய வைத்துள்ள கனமழை மற்றும் வெள்ளம் - தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

December 3, 2025 5:05 am
நாட்டை நிலைகுலைய வைத்துள்ள கனமழை மற்றும் வெள்ளம் - தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

இலங்கையை பாதித்த டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





நாட்டின் பல பகுதிகளை பல நாட்களாக பாதித்த பாதகமான வானிலை, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.





அதற்கமைய, கண்டி, நுவரெலியா, பதுளை, குருணாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலநறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, களுத்துறை ஆகியவை தேசிய பேரிடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.





2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now