இடம்பெயர்ந்த மக்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக...
இடம்பெயர்ந்த மக்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை
இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.