பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான ...
பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான நிவாரணத் தொகை - வெளியானது விசேட சுற்றறிக்கை
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போது விசேட உரை ஒன்றை நிகழ்த்தி ஜனாதிபதி குறித்த நிவாரணத் திட்டங்களை அறிவித்தார்.
இதனையடுத்து நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை இன்று (05) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
திடீர் பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை கீழே…





