New Updates! Fresh news just arrived.

சேவை இன்றி கட்டணம் வசூல்: டயலொக், எயார்டெல் நிறுவனங்களுக்...

News

சேவை இன்றி கட்டணம் வசூல்: டயலொக், எயார்டெல் நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு

December 6, 2025 4:29 pm
சேவை இன்றி கட்டணம் வசூல்: டயலொக், எயார்டெல் நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு

Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இரண்டு நபர்கள் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

தங்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்ட பின்னர், கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் இதுவரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொலைத்தொடர்பு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டை பதிவுசெய்துள்ள U.L. மப்றூக் குற்றம்சாட்டியுள்ளார்.

சேவை வழங்கப்படாத நாட்களுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதால், இது ஏமாற்று மற்றும் மோசடி செயல் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சேவை திடீரென நிறுத்தப்பட்டதன் விளைவாக, அவர்களது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதோடு, சமீபத்திய பேரிடர் சூழ்நிலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நலநிலை பற்றி அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தனிப்பட்ட பிரச்சினையை மட்டுமல்லாது, இதே பிரச்சினையை எதிர்கொள்ளும் பொதுமக்களின் சார்பாக முன்வைக்கப்படுவதாக முறைப்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now