ஜனாதிபதியால் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தர...
ஜனாதிபதியால் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
பொருளாதார முடிவுகளை எடுக்கும்போதும், திட்டங்களை வகுக்கும்போதும் எப்போதும் துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் நேற்று (6) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சேதமடைந்த விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்