வெள்ளத்தால் பாதிப்படைந்த அரிசியை சந்தைக்கு விநியோகித்த மோ...
வெள்ளத்தால் பாதிப்படைந்த அரிசியை சந்தைக்கு விநியோகித்த மோசடி!
வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியினை மோசடியான முறையில் தயார்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கின்ற மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற நிலையில் உள்ள 1,000 கிலோ கிராம் அரிசியினை விற்பனைக்கு செய்யத் தயார் செய்த சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இந்நாட்களில் தாம் கொள்வனவு செய்யும் அரிசி தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
மேலும், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் இருக்குமானால், அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு தெரிவிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.