அருச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம்: பிரதமர் மற்றும் ...
அருச்சுனா எம்.பியின் ஆபத்தான சாரத்தியம்: பிரதமர் மற்றும் அமைச்சரிடம் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மோட்டார் சைக்கிளில் செலுத்தும்போது அதனை காணொளியாக பதிவு செய்கின்ற காணொளி அவரது சமூக ஊடகங்களிலும், ஏனைய சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.
அவர் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பிரதான வீதியில் பயணிக்கும்போது இவ்வாறு ஆபத்தான முறையில், தானே காணொளி பதிவு செய்வதினை அவதானிக்க முடிகின்றது. இது வீதியில் செல்கின்ற ஏனையவர்களுக்கும் அச்சத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே அமைகின்றது.
சாதாரண ஒரு நபர் வாகனத்தை செலுத்துமாபோது கைத்தொலைபேசில் உரையாடுவதோ, கைத்தொலைபேசியை பாவனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் அது ஆபத்தான சாரத்தியமாகவே கருதப்படும்.
இது இவ்வாறு இருக்கையில் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு ஆபத்தான முறையில் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்துவது விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய, போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பு.கஜிந்தன்