New Updates! Fresh news just arrived.

பல கோடி பெறுமதியான வளங்களை களவாடி இலங்கைக்கு பிச்சைபோடும்...

News

பல கோடி பெறுமதியான வளங்களை களவாடி இலங்கைக்கு பிச்சைபோடும் இந்தியா: அண்ணாமலை குற்றச்சாட்டு!

December 8, 2025 9:44 am
பல கோடி பெறுமதியான வளங்களை களவாடி இலங்கைக்கு பிச்சைபோடும் இந்தியா: அண்ணாமலை குற்றச்சாட்டு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இலங்கையின் பல பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு பல உதவிகளை வழங்கி வருகிறது அந்த வகையில் இந்தியாவும் பல மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது





இவ் உதவிகள் மற்றும் தற்போது இலங்கை கடல்பகுதியில் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் இலங்கையின் கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும் வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் இணைப்பாளருமானஅண்ணாமலை அவர்கள் கருத்து தெரிவிக்கையில்





எமது கடல்வளத்தினை இந்தியா சுரண்டி பல கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்த பின்னர் அதில் கொஞ்ச பகுதியினை எமக்கு பிச்சை போட்டு தாம் கொடையாளி போல் சர்வதேசத்திற்கு கபட நாடகம் ஆடுகின்றனர்





இவர்கள் இலங்கையினுடைய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய எண்ணம் இருக்குமானால் எமது வளத்தினை சூரையாடுவதினை முதலில் நிருத்த வேண்டும்





இந்தியா அரசாங்கம் இலங்கையில் தற்போது ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரே அவர்களின் கொளளை சம்பவம் அதிகரித்து உள்ளதாகவும் அதற்கான நடவெடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் தாம் உதவி செய்வதால் இலங்கையின் வளங்களை களவாடலாம் எனும் எண்ணத்தில் இருந்து முற்றாக வெளியே வர வேண்டும் எனவும் கூறியுள்ளதோடு





மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் எமது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தற்போது அதிகம் நடக்கும் கொள்ளைகள் தொடர்பாக அரங்கமானது விழிப்படைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.





பூ.லின்ரன்






https://youtu.be/YL5bjTh40kI?si=kH7ho9Tj4zIYmO8e

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now