பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!
பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களின் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, மேல், வடக்கு மற்றும் கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் மாகாணங்களிலு ள்ள பாடசாலைகளினை எதிர்வருகின்ற 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் அனர்த்தங்களில் அதிகளவில் முகங்கொடுத்திருக்கும் வலையங்களினை உள்ளடக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைவாக ஊவா மாகாணத்தின் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தினுடைய 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தின் 115 பாடசாலைகள் எதிர்வருகின்ற 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டினுடைய மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டமானது 2025.12.16ஆம் திகதி தொடக்கம் 2025.12.22ஆம் திகதி வரை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் 2025.12.29ஆம் திகதி தொடக்கம் 2025.12.31ஆம் திகதி வரையிலும், முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது நடாத்தப்படாத ஏனைய பாடசாலைகளில் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பான மேலதிக அறிவிப்புகளினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணையானது ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படும், எனவும் சாதாரண தரப் பரீட்சையானது திட்டமிட்டபடி பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கீழே பார்வையிட முடியும்.