New Updates! Fresh news just arrived.

அனர்த்த உதவிக்கு பெற்ற படகை குத்தகைக்கு கொடுத்த வடமராட்சி...

News

அனர்த்த உதவிக்கு பெற்ற படகை குத்தகைக்கு கொடுத்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசம்!

December 9, 2025 1:39 pm
அனர்த்த உதவிக்கு பெற்ற படகை குத்தகைக்கு கொடுத்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசம்!

வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்திடமிருந்து அன்பளிப்பாக அனர்த்த உதவிக்கென பெற்றுக் கொண்டிருந்த இரு படகுகளினை சமாசம் குத்தகைக்கு கொடுத்துள்ளமை சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது





சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,





வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு சமாசத்திற்கு உட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இலவசமாக இயந்திரத்துடன் இரு படகுகள் வழங்கப்பட்டன





அதனடிப்படையில் கடற்தொழிலாளர் சங்க சமாசம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் அனர்த்த நிலையின் போது அவசர உதவிக்காக இலவசமாக இரு படகுகள் வழங்கப்பட்டன.





டித்வா புயல் நாடு முழுவதும் தாக்கத்தினை ஏற்படுத்தி பெரும் உயிரிழப்பினை நிகழ்த்திய வேளை வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசத்திற்கு அனர்த்த உதவிக்கு கொடுத்த இரு படகுகள் தொடர்பில் மக்களால் ஆராயப்பட்டுள்ளது.





இதன்போது சமாசம் அனர்த்த நிலைமையின் போது அவசர உதவிக்கு கொடுத்த இரு படகுகளையும் குத்தகை அடிப்படையில் தனது சமாச நிர்வாக உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது





வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசத்தின் குறித்த தன்னிச்சையானதும்,மக்கள் மீது அக்கறை இல்லாத செயற்பாட்டிற்கும் அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.





பூ.லின்ரன்






https://youtu.be/UhPABftaoP0?si=41hCagV3LP7rEE8v

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now