New Updates! Fresh news just arrived.

றஜீவன் எம்பிக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குமிட...

News

றஜீவன் எம்பிக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குமிடையில் விசேட சந்திப்பு!

December 9, 2025 1:57 pm
றஜீவன் எம்பிக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குமிடையில் விசேட சந்திப்பு!

வடமராட்சி கிழக்கு பிரதேச அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் தலமையிலான குழுவினற்கும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திருமதி உஷா மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இன்றைய தினம் காலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது





இவ் சந்திப்பில் புயலிற்கு பிந்திய வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு, அவசர தேவைகள், நிவாரணப் பொருட்கள் விநியோகம், மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.





இச் சந்திப்பில தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஸாம் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் உதயபாஸ்கரன் அவர்களும் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரிதா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்





பூ.லின்ரன்






https://youtu.be/UhPABftaoP0?si=41hCagV3LP7rEE8v

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now