New Updates! Fresh news just arrived.

பேரிடர் நிவாரணம்: மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை! - ...

News

பேரிடர் நிவாரணம்: மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை!

December 9, 2025 3:38 pm
பேரிடர் நிவாரணம்: மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை!

பேரிடர் நிவாரணத்தினை வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அறிக்கையொன்றினை வெளி யிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.





டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை சில மோசடிக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பெறும் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.





பேரிடருக்குப் பின்னரான நிவாரண செயற்பாடுகளுக்கான தகவல் சேகரிப்பானது அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம சேவகர்களுடன் இணைந்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.





எனவே பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தமது தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்களிடம் பகிர்வதை தவிர்க்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.






https://youtu.be/UhPABftaoP0?si=41hCagV3LP7rEE8v

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now