New Updates! Fresh news just arrived.

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

News

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

December 10, 2025 11:02 am
மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களமானது தெரிவித்துள்ளது.





இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.






https://youtu.be/3nd43JeGCyc?si=nRjoeOkgYk1ZOKBy

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now