New Updates! Fresh news just arrived.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு! - Gu...

News

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

December 11, 2025 2:57 pm
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருணாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.





அத்தோடு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்பு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களினுடைய சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமான நிலையும் காணப்படலாம்.





இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.






https://youtu.be/fpPe2Wsy0bI?si=WDFYQE3r5_Jr3894

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now