New Updates! Fresh news just arrived.

கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு!

News

கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு!

December 12, 2025 11:11 am
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு!

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.





2025 நவம்பர் ,மாதம் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முறை மட்டும் இக்கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளது.





மேலும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினுடைய ஒரு திட்டமாக, குறித்த கொடுப்பனவு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.






https://youtu.be/1Y51skO8m4E?si=Ga1AGBKNfoijQONk

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now