New Updates! Fresh news just arrived.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை: செய்தி சேகரி...

News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை: செய்தி சேகரித்த ஊடகவியலாள ருக்கும் அச்சுறுத்தல்!

December 13, 2025 12:24 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை: செய்தி சேகரித்த ஊடகவியலாள ருக்கும் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களினை முன் வைத்துள்ளனர்





இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்,





வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட போதும் எங்களுக்கு எந்த விதமான கொடுப்பனவுகளும் தரப்படவில்லை.கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு வழியின்றி ஊடகத்தை அழைத்துள்ளோம்





டித்வா புயல் இலங்கையினை தாக்கிய சமயத்தில் எமது வீடுகளும் வெள்ளத்தால் நிரம்பி இருந்த நிலையில் உறவினர் வீட்டில் ஒரு சில குடும்பம் தங்கி இருந்தோம்.





எங்களுடைய வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்த போதும் எமது வீட்டை கிராம அலுவலர் இதுவரை வந்து பார்க்கவில்லை.சேத விபரங்களை அறிக்கையிடவில்லை.நிரந்தர வீடு என்று கூறிச் சென்றார்.





பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளினை வழங்குமாறு ஜனாதிபதி அடிக்கடி கூறி வருகின்றார் ஆனால் உண்மையில் பாதிப்படைந்த மக்களினை அந்த நிவாரணம் போய் சேருவதினை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்





பாதிக்கப்படாத மக்களுக்கு எமது பகுதியில் வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை யாரும் கவனிக்கவில்லை





கிராம அலுவலர் கூட இதுவரைக்கும் பார்க்கவில்லை.காலில் காயமுற்று நடக்க முடியாதவர்களாகவும் துன்பப்படுகின்றோம்.
அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தை வழங்க ஏன் அதிகாரிகள் தயங்குகின்றார்கள்





எவ்வாறான வீடாக இருந்தாலும் சரி புயலினால் சேதமடைந்த வீட்டினை வந்து கிராம அலுவலர் பார்வையிட வேண்டும் அல்லவா? அதனையும் வந்து பார்வையிடவில்லை





அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் பலர் பயனடைந்து வருகிறார்கள் ஆனால் உண்மையில் வறுமைக்கோட்டில் கஷ்டப்படும் எங்களுக்கு எந்த விதமான திட்டங்களும் தரப்படவில்லை.வெள்ள நிவாரணம் கூட கிடைக்கவில்லை.





வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அயலவர்களினுடைய வீட்டில் குடியிருக்கும் எங்களினை யாரும் வந்து நலம் விசாரிப்பதாகவும் இல்லை.ஒரு சிலரினுடைய தூண்டுதலில் நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறோம்.





ஒரு சில கிராமத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு இருப்பது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்





உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரணம் போய் சேர்ந்ததா என்பதினை ஆராய ஜனாதிபதி அவர்கள் சிறப்பு குழு ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்





காலா காலம் நாம் வீடு இன்றி தற்காலிக வீட்டில் துன்பப்பட்டு வருகிறோம் அரசாங்கம் கொடுக்கும் வெள்ள நிவாரணத்தை கூட அதிகாரிகள் கொடுப்பதற்கு மனம் இல்லாமல் இருக்கிறார்கள்





ஜனாதிபதி அவர்கள் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி பதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு கொடுப்பவினை பெற்றுத் தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்





மக்களின் வேண்டுதலின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வத்திராயன் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.





பூ.லின்ரன்






https://youtu.be/TqV65oMmxAo?si=3Cjxx8WPh8sLwpm-

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now