New Updates! Fresh news just arrived.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ். சிறைச்சாலையில் இ...

News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ். சிறைச்சாலையில் இருந்து உதவிகள்!

December 13, 2025 1:06 pm
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ். சிறைச்சாலையில் இருந்து உதவிகள்!

இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு விதமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.





இந்த உதவி பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன்னிடம் ஒப்படைக்கப்பட்டது.





சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டது.





சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர்,
ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.





பு.கஜிந்தன்






https://youtu.be/xUYcbvoMCVI?si=6XNyM7U_cusdWllC

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now