New Updates! Fresh news just arrived.

தேசிய ரீதியில் சாதனை படைத்து;துள்ள யாழ் மாணவி: குவியும் ப...

News

தேசிய ரீதியில் சாதனை படைத்து;துள்ள யாழ் மாணவி: குவியும் பாராட்டுக்கள்!

December 14, 2025 8:19 am
தேசிய ரீதியில் சாதனை படைத்து;துள்ள யாழ் மாணவி: குவியும் பாராட்டுக்கள்!

கல்வியமைச்சானது இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் விஞ்ஞான மற்றும் விவசாய செயற்பாட்டு அறிவை மேம்படுத்தும் முகமாக இளம் விவசாய விஞ்ஞானி [Little agriculturist-2025] போட்டி நிகழ்ச்சி திட்டத்தினை கடந்த 4 வருடமாக தேசியரீதியில் நடத்தி வருகிறது.





இம்முறை இடம்பெற்றிருந்த போட்டியில் தங்க விருதினை குட்டியப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் 09இல் கல்விகற்கும் மாணவி செல்வி கருணா நதீனா பெற்றுக்கொண்டார்.





வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிய பாடசாலையில் கல்விகற்கும் குறித்த மாணவியின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.





இம்மாணவிக்கான விருது அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் (BMICHன்) லோட்டஸ் அரங்கில் இடம்பெற்ற இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின் 81வது வருடாந்த அமர்வில் வழங்கப்பட்டது.





குறித்த நிகழ்வில் இலங்கையினுடைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சரான போராசிரியர் கிரிஷாந்த அபயசேனாவின் [Professor Chrishantha Abeysena] பிரசன்னத்தோடு, பேராசிரியர் உடெனி பி நவகமுவவினால் (Udeni P Nawagamuwa - Civil Engineering) மாணவிக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.





பு.கஜிந்தன்






https://youtu.be/Whex9WvNzj0?si=VzVzmFtEBUWnUlyd

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now