New Updates! Fresh news just arrived.

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

News

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

December 15, 2025 11:49 am
துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களோடு நபர் ஒருவர் அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.





கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், எல்பிட்டிய - சாதமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





இதன்போது அவரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றும், 2 மெகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.





கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சாதமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 64 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.





மேலும், குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்ய சந்தேக நபர் திட்டமிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






https://youtu.be/9hmYlA1twQg?si=6wruvsoRBM6Bppx_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now