New Updates! Fresh news just arrived.

தங்கம் வென்று தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட சபிலு...

News

தங்கம் வென்று தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு!

December 15, 2025 1:16 pm
தங்கம் வென்று தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு!

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க இருக்கும் தேசிய மட்ட போட்டியில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.





இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட இச்சதுரங்க போட்டித்தொடரானது 13.12.2025 ம் திகதி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. 11 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நடாத்தப்பட்ட இப் போட்டிகளில் கலந்து கொண்டு அவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.





குறித்த மாணவி சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 5 ல் கல்வி பயிலுவதுடன், கடந்த இரு தடவைகள் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





நூருல் ஹுதா உமர்






https://youtu.be/ig2vS7p379o?si=TZVLnKlD0RCrac2M

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now