New Updates! Fresh news just arrived.

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை!

News

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை!

December 16, 2025 10:23 am
சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை!

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரான சி.பி. ரத்நாயக்கவினை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.





சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.





சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.





573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்தினுடைய இல. 23 (அ) (1) பிரிவின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினுடைய சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புடையதாக இந்த கைது இடம்பெற்றிருந்தது.





விளையாட்டு அமைச்சு, தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சு ஆகியவற்றினுடைய அமைச்சராகப் பதவி வகித்த சீ.பி ரத்நாயக்க இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






https://youtu.be/iTyIw8ALLw0?si=vV9NSgSNZw9RVkBv

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now