ஊவா மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு!
News
ஊவா மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு!
ஊவா மாகாணத்தினுடைய அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று (16) தனியார் ஊடகமொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு முக்கிய காரணம் போக்குவரத்து அசௌகரியங்கள் அல்லது நிவாரண முகாம்கள் இயங்குவதே ஆகும் என்றும் அவர் கூறினார்.