சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 'ஐஸ்' போதை...
News
சீருடையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது!
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளினால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவாறே, 200 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளோடு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளினுடைய பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.