New Updates! Fresh news just arrived.

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்! -...

News

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

December 17, 2025 2:32 pm
வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினுடைய 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீட்டு சபைக்கூட்டமானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது தவிசாளர் பாதீட்டு உரையை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பாதீடு மீதான கருத்துக்களை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.





28 உறுப்பினர்களினை கொண்ட சபையில் 20 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியினுடைய 06 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். 02 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.





இந்நிலையில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையினுடைய 2026ஆம் ஆண்டுக்கான பாதீடானது 14 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.





பு.கஜிந்தன்






https://youtu.be/vZthDa5DBLU?si=K-vj2hPZBnpXC8wG

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now