New Updates! Fresh news just arrived.

மண்டைதீவு புதைகுழி விவகாரம் - 2026 பங்குனி 31 அன்று மீண்ட...

News

மண்டைதீவு புதைகுழி விவகாரம் - 2026 பங்குனி 31 அன்று மீண்டும் நீதிமன்றில்!

December 17, 2025 2:45 pm
மண்டைதீவு புதைகுழி விவகாரம் - 2026 பங்குனி 31 அன்று மீண்டும் நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையினை மீண்டும் இன்று (17) அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது.





குறித்த வழக்கு நேற்றையதினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,
அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்றையதினம் (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று நேற்று (16) உத்தரவிட்டிருந்தது.





இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் இன்று சமர்பித்தனர்.





இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பு.கஜிந்தன்






https://youtu.be/vZthDa5DBLU?si=K-vj2hPZBnpXC8wG

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now