மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு!
News
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு!
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளினையும் நாளை (19) மற்றும் எதிர்வருகின்ற திங்கட்கிழமை (22) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலையினை கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.