60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவரை பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பாணந்துறை, வேகட பகுதியினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
மேலும், சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.