பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை!...
பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவசர அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு நேற்று முன் தினம் (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று இது தொடர்பிலான விவாதம் இடம்பெற்றதினை தொடர்ந்து குறித்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, ஜனவரி மாதம் 06 ஆம் திகதி காலை 9.30 மணி வரைக்கும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையில் சபாநாயகரினுடைய அனுமதியின் பேரில் பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மேலதிக விசேட விடுமுறையானது வழங்கப்பட்டு, இது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையின் ஊடாக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் 24 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்தமாய் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, பாராளுமன்ற ஊழியர்களுக்கு மீண்டும் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமையே தமது கடமைகளுக்கு திரும்பவுள்ளனர்.