New Updates! Fresh news just arrived.

ஐஸ் போதைப்பொருளுடன் வீடொன்றில் ஐவர் கைது!

News

ஐஸ் போதைப்பொருளுடன் வீடொன்றில் ஐவர் கைது!

December 20, 2025 11:03 am
ஐஸ் போதைப்பொருளுடன் வீடொன்றில் ஐவர் கைது!

ஐஸ் போதைப்பொருள்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த 5 பேர் சம்மாந்துறை பொலிஸாறினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாடி கிராமம் 01 பகுதியில் குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.





குறித்த நடவடிக்கையின் போது 2,055 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் - மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள் என்பனவும் சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.





சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது கைதான சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.





மேலும், குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவினுடைய வழிகாட்டுதலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயசீலன் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பாறுக் ஷிஹான்






https://youtu.be/dlWx8344K5Q?si=4Q40fgYjDH11_ewM

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now