New Updates! Fresh news just arrived.

"நாம் இருக்கிறோம்" ஊடகவியலாளர் நிவாரணப் பணி! மூ...

News

"நாம் இருக்கிறோம்" ஊடகவியலாளர் நிவாரணப் பணி! மூதூரில் முன்னெடுப்பு!

December 21, 2025 11:08 am
"நாம் இருக்கிறோம்" ஊடகவியலாளர் நிவாரணப் பணி! மூதூரில் முன்னெடுப்பு!

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச ஊடகவியலாளருக்கு “நாம் இருக்கிறோம்” ஊடகவியலாளர் நிவாரணப் பணி எனும் திட்டத்தின் கீழ் வீட்டுப் பாவணைப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (20) சனிக்கிழமை மூதூர் தனியார் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.





குறித்த நிவாரணப் பணியினை சிலோன் மீடியா போரம் மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்ஸ் என்பனவும் இணைந்து மேற்கொண்டது.





மூதூர் பிரதேச ஊடகவியலாளர் எம். இஹ்சான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் சட்ட முதுமானி பிர்னாஸ் இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு பெருட்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.





இதில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீட், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் தலைவர் மருதூர் ஏ.எல். அன்சார், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ. எஸ்.எம். முஜாஹித் மாற்று சிலோன் மீடியா போரத்தினுடைய பொருளாளர் நூருல் ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தினுடைய உயர்பீட உறுப்பினர்களான எம்.வி.எம்.நிம்சான், என்.எம்.சிறாஜ்டீன், என்.எம். அப்ராஸ்
மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் நிறுவனத்தினுடைய உறுப்பினர்களான எம் வி.எச். நியாஸ், ஏ.எல்.எம். நிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.





நூருல் ஹுதா உமர்






https://youtu.be/ovg62osaqrg?si=Zc_DSix2WA-eYwZt

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now