New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது! - ...

News

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது!

December 21, 2025 12:20 pm
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் திகதி 945 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:





கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 16 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளினை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.





17 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.





குறித்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 637 கிராம் ஐஸ், 285 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 432 கிராம் கஞ்சா செடிகள் மற்றும் ஏராளமான பிற போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






https://youtu.be/ovg62osaqrg?si=Zc_DSix2WA-eYwZt

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now