New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

News

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

December 21, 2025 1:21 pm
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.





இன்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார்.





ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.





இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.





பு.கஜிந்தன்






https://youtu.be/BIFiiK4jTRQ?si=N1IdRQ4Am1fE_LHu

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now