New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி!

News

கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி!

December 23, 2025 1:03 pm
கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.





காங்கேசன்ந்துயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முற்பட்டவேளை குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.





கடவையின் ஊடாக வீதியை கடக்க முற்பட்டவர் ரயிலுடன் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் இவ்விபத்து இடம்பெற்ற வேளை ரயில் வீதி காவலாளி இப்பகுதியில் காணப்படவில்லை எனவும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த பகுதியில் இரண்டு தடவைகள் இடம்பெற்று உள்ளதாகவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.





இரத்தினராசா கிருஷ்ணமோகன் ஆணைப்பந்தி நல்லூர் யாழ்ப்பாணம் 52 வயதுடைய பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே பரிதாபகரமாக பலியாகினார் இச்சம்பவம் தொடர்பாக பளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





பூ.லின்ரன்






https://youtu.be/torZ37rrXqk?si=w3Q4ea8hTCgrBaP3

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now