New Updates! Fresh news just arrived.

ஜனவரி முதல் கல்வி சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை...

News

ஜனவரி முதல் கல்வி சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை!

December 24, 2025 2:38 pm
ஜனவரி முதல் கல்வி சீர்திருத்தம் நடைமுறைக்கு சாத்தியமில்லை!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.





ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.





குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.





மக்களினதும், பாடசாலை மாணவர்களினதும் மனநிலைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.





அவர்களினது அடிப்படை உரிமைகளை மீறக் கூடாது. பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் சரியான திட்டமொன்று இல்லாமையால் பிள்ளைகளே பாதிப்பட்டுள்ளனர்.





அரசாங்கம் விரும்புவது போன்று ஜனவரி தொடக்கம் புதிய சீர்திருத்தங்களினை அமுல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதினால், இது தொடர்பில் சிந்தித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.





இந்த தருணத்தில் மக்கள் எந்தளவு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதினை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.





சர்வதேச தொழிலாளர் அமைப்பினுடைய கூற்றுப்படி, குறித்த பேரழிவால் 374,000 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன.





23% விவசாய காணிகளும் 35% தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.





மாதத்திற்கு ரூபா.48 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.





சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலை காணிகள் கூட அழிந்துபோயுள்ளன.





அத்தோடு, அரசாங்கம் வீராப்பு பேசிக் கொண்டிருக்காமல், மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளினை வழிமுறைமைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.






https://youtu.be/zeC2X2MDjlU?si=UAXA1HCwCNu046Bw

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now