New Updates! Fresh news just arrived.

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து ...

News

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து நிவாரணத் தொகுதி அனுப்பி வைப்பு!

December 25, 2025 10:28 am
நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து நிவாரணத் தொகுதி அனுப்பி வைப்பு!

அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு பல மில்லியன் பெறுமதியான மேலும் ஒரு நிவாரணத் தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்கும் நோக்கில் இந்த நிவாரண நடவடிக்கை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையில் கல்முனை வலயக் கல்வி பணிமனையால் மேற்கொள்ளப்பட்டது.





குறித்த மனிதாபிமானச் செயற்பாட்டிற்கு தங்களினுடைய ஒத்துழைப்பையும் உதவிக்கரங்களினையும் வழங்கிய அனைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இவ்வாறான கூட்டு முயற்சிகள் சமூக ஒற்றுமையையும் பரஸ்பர உதவியையும் மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்தார்.





நூருல் ஹுதா உமர்






https://youtu.be/1YghZFyTuiU?si=AD2OTltabZ4Qis3_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now