New Updates! Fresh news just arrived.

சிறீதரன் எம்.பிக்கும் அருச்சுனா எம்.பிக்குமிடையே கடும் வா...

News

சிறீதரன் எம்.பிக்கும் அருச்சுனா எம்.பிக்குமிடையே கடும் வாக்குவாதம்!

December 26, 2025 2:51 pm
சிறீதரன் எம்.பிக்கும் அருச்சுனா எம்.பிக்குமிடையே கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினரான சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.





டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான சுற்று நிருபம் தொடர்பான விவாதத்தின்போது இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டது.





நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறுக்கிட்டார் இதன்போது “குட்டி நாயை போன்று குரைத்துக்கொண்டு இருக்கக் கூடாது என சிறீதரன் தெரிவித்தார்.





இந்நிலையில் குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகிய இளங்குமரனை பார்த்து எவ்வாறு நாய் என கூறமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.





படிப்பறிவு இருக்க வேண்டும், கைநாட்டு அரசியலை செய்யும் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் தெரிவதில்லை என விமர்சித்திருந்தார்.





இதன்போது கடும் தொனியில் சிறீதரன் எம்.பி, உனக்கு படிப்பறிவு இருக்கிறதா? நாங்கள் கைநாட்டு என்றால் நீ கால்நாட்டா என கூறினார். இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது.





பு.கஜிந்தன்






https://youtu.be/dIYzK0VkcfY?si=adTTrQwhbvIaIHD_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now