New Updates! Fresh news just arrived.

எம்.பிமாரின் தனிப்பட்ட உதவியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூ...

News

எம்.பிமாரின் தனிப்பட்ட உதவியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பினரா?

December 26, 2025 3:01 pm
எம்.பிமாரின் தனிப்பட்ட உதவியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பினரா?

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.





கூட்டத்தின் நடுப் பகுதிக்கு பின்னர் அருச்சுனாவின் விரும்பத்தகாத செய்ற்பாடுகளால் அவ்வப்போது கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் தையிட்டி திஸ் விகாரை விவகாரமானது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.





அதன்போது பின்னாள் இருந்த எம்.பிகளின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் கூட்டத்தில் உரத்து சத்தமிட தொடங்கினர். குறித்த விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுமாறும், மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு தொடர்ச்சியாக கூச்சலிட்டனர்.





அதையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட சிலர் தையிட்டி விவகாரம் தொடர்பாக கருத்துரைத்தவாறு இருந்தனர். இந்நிலையில் பின்னால் இருந்து கூச்சலிட்டவர்களுடன் சேர்ந்த சிலர் கூட்டத்தை இடையில் குழப்பியதை அவதானிக்க முடிந்தது.





பு.கஜிந்தன்






https://youtu.be/dIYzK0VkcfY?si=adTTrQwhbvIaIHD_

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now