New Updates! Fresh news just arrived.

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைத...

News

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது!

December 27, 2025 10:09 am
பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது!

சீதுவையிலுள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.





மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பின் போது, 6 சந்தேக நபர்களும் அவர்களிடம் இருந்து 6 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.





கைது செய்யப்பட்டவர்களில் குறித்த நிறுவனத்தினுடைய முகாமையாளர், வர்த்தகர் ஒருவர் மற்றும் மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள், மற்றொரு நபர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும், சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.






https://youtu.be/tdbc4j1enjg?si=dHysF61jdoweMGM0

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now