New Updates! Fresh news just arrived.

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் சாதித்த மாணவர்களை ...

News

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் சாதித்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் "GRAND ACHIEVERS' DAY - 2025 " பெருவிழா!

December 27, 2025 10:57 am
சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் சாதித்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் "GRAND ACHIEVERS' DAY - 2025 " பெருவிழா!

2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றிய கல்முனை கல்வி வலயத்திற்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பெரும் வெற்றிகளினை பெற்று தந்த சாதனை மாணவர்களினை பாராட்டி கௌரவிக்கும் "GRAND ACHIEVERS' DAY - 2025 " பெருவிழாவானது நேற்று (26) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.





கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரான திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களினை பாராட்டி பரிசுகள் வழங்கி வைத்தார்.





இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.





இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





நூருல் ஹுதா உமர்






https://youtu.be/tdbc4j1enjg?si=dHysF61jdoweMGM0

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now