New Updates! Fresh news just arrived.

நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக...

News

நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும்: பிரதேச சபை உறுப்பினர் பிரகலாதன் வலியுறுத்தல்!

December 27, 2025 11:24 am
நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும்: பிரதேச சபை உறுப்பினர் பிரகலாதன் வலியுறுத்தல்!

புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வேலணை - மண்கும்பானில் ஏற்கனவே இருக்கின்ற, சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்து தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சுவாமினாதன் பிரகலாதன் வலியுறுத்தியுள்ளார்.





நேற்று வேலணை சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,





மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனையவையும் கடுமையான பாதிப்புக்களுடனேயே இருக்கின்றன.





இவற்றினை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணமுடியும்.





அதுமட்டுமல்லாது இது விவசாய தேவைகளுக்கும் சாதகமாக அமையும்.





வேலணைக்கே நன்னீர் கொடுக்கும் நன்நீர் வளமானது எமது மண்கும்பானில் மழை நீரை அதிக அளவில் சேகரித்தால் மேலும் நன்னீர் இருப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம்.





குறித்த குளங்களுக்கு நிதியினை செலவு செய்வதானது வீண் விரையமற்ற ஆரோக்கியமான ஒரு விடயம்.





இதை விடுத்து புதிதாக இருக்கின்ற நீர் நிலைகளினை கைவிட்டு புதியவற்றினை உருவாக்க முயற்சிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாது.





அதே நேரம் சாட்டிப் பகுதியின் பாதுகாப்பு அவசியமானது. அதற்கான முயற்சி எடுக்கப்படுமானால் அதை வரவேற்போம் என்றார்.





பு.கஜிந்தன்






https://youtu.be/L53L5-0IEJk?si=IlVkILhFlyrAIvG2

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now