New Updates! Fresh news just arrived.

டித்வா போரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்ட...

News

டித்வா போரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்: விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன் தெரிவிப்பு!

December 27, 2025 11:56 am
டித்வா போரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்: விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன் தெரிவிப்பு!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பேரிடரினால் சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவு சங்கத்தினுடைய தலைவர் மைதிலி ரதீஸ்வரன் தெரிவித்தார்.





கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் சமூக விஞ்ஞான பிரிவு நடாத்திய பேரிடரை எதிர்கொள்வோம் நல்லூரில் வெள்ளம் கருத்தமர்வு நிகழ்வில் தலைமை உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.





அவர் மேலும் தெரிவிக்கையில், பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரியளவிலான பேரிடராக டித்வா வெள்ளப் பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த இலங்கையிலும் அதனுடைய பாதிப்புக்கள் உணரப்பட்டுள்ளது.





குறித்த அனர்த்தத்தினால் 650 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்ற நிலையில் சுமார் 20 ஆயிரம் சிறுவர்களும் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.





4 இலட்சத்து 73 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5700 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளது.





சுமார் 16 ஆயிரம் கிலோமீட்டர் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, 270 கிலோமீட்டர் புகையிரத பாதைகளும் சேதம் அடைந்த நிலையில் 480 மேற்பட்ட பாலங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.





இலங்கையினுடைய பொருளாதார இழப்பு 6 தொடக்கம் 7 பில்லியன் அமெரிக்க டொலராக எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் 20 வீத பயிர்ச்செய்கைளானது பாதிப்பட்டுள்ளது.





வடக்கு மாகாணத்தை பொருத்தவரையில் மன்னார் முல்லைத்தீவு , வவுனியா , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டம் குறைந்த அளவு பாதிப்பையே எதிர்நோக்கி இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.





பு.கஜிந்தன்






https://youtu.be/L53L5-0IEJk?si=IlVkILhFlyrAIvG2

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now