New Updates! Fresh news just arrived.

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறிய...

News

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்!

December 28, 2025 11:22 am
கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





அவரை இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 26ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.





2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





மதூஷிடம் இருந்து மீட்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.





மேலும், தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனமை குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.





கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






https://youtu.be/M6Qt0DRCIO8?si=Ifg6z5UfevyE-rnA

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now