New Updates! Fresh news just arrived.

நாளைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு!

News

நாளைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு!

December 31, 2025 10:44 am
நாளைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு!

நாளை (01) வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.





ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.





சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.





இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் , பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.






https://youtu.be/WDWkm4q3VJ0?si=hOIePns4fltiB7rf

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now