குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 640 ச...
News
குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 640 சந்தேக நபர்கள் கைது!
தீவு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக காவல்துறை மேற்கொண்ட தினசரி தேடுதல் நடவடிக்கைகளில் 640 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேற்று (11) 27,217 பேர் சோதனையிடப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்கள் தொடர்பாக 30 பேர் நேரடியாக அடையாளம் காணப்பட்டதாகவும், பிடியாணை நிலுவையில் இருந்த 88 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் 173 பேரையும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் 133 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், மற்ற போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,051 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.